தற்போதைய செய்திகள்

கடற்கரைகள், பூங்காக்களில் ஜன.15 - 17 வரை பொதுமக்களுக்கு தடை

DIN

பொங்கல் விடுமுறையொட்டி ஜனவரி 15 முதல் 17 வரை கடற்கரைகள், பூங்காக்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், பொங்கல் விடுமுறை நாள்களில் கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளில் காணும் பொங்கல் அன்று (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், பொங்கல் விடுமுறை நாள்களான ஜனவரி 15 முதல் 17 வரை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகள், வண்டலூர் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்கள் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT