முகப்பு
தற்போதைய செய்திகள்

தாமிரவருணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை மூடல்

தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நெல்லை - திருச்செந்தூர் சாலை மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
திருநெல்வேலி தாமிரவருணி கரையோரம் குறுக்குத்துறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்.
பகிர்:

தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நெல்லை - திருச்செந்தூர் சாலை மூடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இதையடுத்து, நேற்று முதல் பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமாநதி சேர்வலாறு அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் 60,000 கனஅடி நீர் தாமிரவருணியில் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தாமிரவருணி கரையோரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை - திருச்செந்தூர் இடையேயான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →