முகப்பு
தற்போதைய செய்திகள்

‘கட்சியிலிருந்து வெளியேற விரும்புவர்கள் விரைவாக வெளியேறுங்கள்’:மம்தா

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலக நினைப்பவர்கள் விரைவாக விலகுங்கள் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
பகிர்:

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலக நினைப்பவர்கள் விரைவாக விலகுங்கள் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சுவேந்து அதிகாரி கடந்த மாதம் விலகியதை தொடர்ந்து பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஹூக்லி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகல் குறித்து மம்தா கூறியதவாது,

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலக நினைப்பவர்கள் விரைவாக விலகுங்கள். நீங்கள் மேற்குவங்கத்திற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேவையில்லை. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அவர்களுக்கு இடம் கொடுக்கமாட்டோம் என்ற பயத்தில் கட்சியை விட்டு விலகுகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →