முகப்பு
தற்போதைய செய்திகள்

+2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

தமிழகத்தில் +2 மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
+2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பகிர்:


சென்னை:  தமிழகத்தில் +2 மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு தோ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அனைத்து மாணவா்களும் தோ்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களுக்கான மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணி முதல்  மாணவா்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவா்களும், தனித் தோ்வா்களும் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தோ்வெழுத அரசு அனுமதித்துள்ளது. இவர்களுக்கான தேர்வு செப்டம்பா் அல்லது அக்டோபா் மாதத்தில் நடத்தப்படும். 

+2 மதிப்பெண் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் விவரங்களும்  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →