தற்போதைய செய்திகள்

பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஆலோசனை

DIN

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வது பற்றி பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்குவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

கடந்த வாரம் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தில்லிக்கு நேரில் சென்று உற்பத்தியை தொடங்குவது குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்துள்ள நிலையில், கோவேக்‌ஷின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக்குடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தடுப்பூசி உற்பத்திக்கான கட்டமைப்பு, மூலப் பொருள்கள், நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு அதிகாரிகள், பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT