தற்போதைய செய்திகள்

377 மாவட்டங்களின் பாதிப்பு விகிதம் 5 சதவீதம்: மத்திய அரசு

நாட்டில் உள்ள 377 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ANI

நாட்டில் உள்ள 377 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவலால் பாதிப்பின் புதிய உச்சம் தொட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் படிப்படியாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில்,

கடந்த மே 7ஆம் தேதி தரவை ஒப்பிடும் போது, தினசரி பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது பதிவாகும் மொத்த பாதிப்பில் 66 சதவீதம் 5 மாநிலங்களிலிருந்து பதிவு செய்யப்படுகிறது.  

377 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 

மொத்தம் 257 மாவட்டங்களில் நாள்தோறும் 100 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

நாட்டில் மொத்தம் 17.2 கோடி பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளோம்.

45 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீத மக்கள் குறைந்தது முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து அஞ்சலி!

திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!

சாத் பூஜையை அவமதிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஏலியன்களின் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! வெளிநாட்டினர் குறித்து அமெரிக்கா!

SCROLL FOR NEXT