முகப்பு
தற்போதைய செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று மாலை ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்.
பகிர்:

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும், பின் கல்வியாளர்களுடனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதன்பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டு நாளை பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 

முன்னதாக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.