தெலங்கானாவில் புதிதாக 2,175 பேருக்கு கரோனா பாதிப்பு
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,175 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,175 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
ஒரேநாளில் 2,175 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 5,87,664ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,918 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3,821 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் இதையடுத்து மொத்தம் 5,53,400ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பலி எண்ணிக்கை 3,346ஆக உள்ளது.