பொதுப் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு
தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து செயல்பட தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து செயல்பட தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடகை வாகனங்கள், டேக்ஸி, ஆட்டோக்கள் பயணிகளின் இ-பதிவுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.