தமிழகம், புதுவையில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
வெப்ப சலனம் காரணமாக ஜூன் 12ஆம் தேதி வரை புதுச்சேர் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை சில இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.