முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் இன்று 212 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 212 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 212 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.27 சதவிகிதம். 

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,31,710ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 516 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 14,04,085 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 24,876ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தில்லியில் இன்னும் 2,749 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →