கரோனா பரவல் காரணமாக நிகழ்வாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டை போலவே இந்தாண்டும் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,
கரோனா பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. அமர்நாத் வாரிய உறுப்பினர்களுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்தாண்டை போலவே அமர்நாத் புனித தலத்தில் மத சடங்குகள் அனைத்தும் நடைபெறும்.
மேலும், பக்தர்கள் இணையவழி மூலம் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Shri Amarnathji Yatra cancelled in wake of Covid-19 Pandemic. Decision after threadbare discussion with Shri Amarnathji Shrine Board members. Yatra to be symbolic only. However, all the traditional religious rituals shall be performed at the Holy Cave Shrine as per past practice.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.