முகப்பு
தற்போதைய செய்திகள்

‘ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’: பிரியங்கா காந்தி

அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பிரியங்கா காந்தி
பகிர்:

அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகுன்றனர்.

அசாமின் தேஸ்பூரில் நடந்த பேரணியில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பேசுகையில்,

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், இங்கு குடியுரிமை சட்டம் செயல்படுத்தமாட்டோம் என்ற சட்டம் இயற்றப்படும்.  மேலும், ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதத்திற்கு ரூ. 2,000 வழங்குவோம். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ. 365 வழங்கப்படும். 5 லட்சம் புதிய அரசு வேலைகளை உருவாக்குவோம். இவை அனைத்தும் வாக்குறுதிகள் அல்ல, உத்தரவாதம் எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →