உ.பி.யில் பெண்ணைக் காப்பாற்றிய காவலர் ரயில் மோதி பலி
உத்தரப்பிரதேசத்தில் பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சமர் பகதூர் சிங் கூறுகையில்,
உத்தரப்பிரதேசம் பார்வாரி ரயில் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை இரவு நிர்மலா தேவி(வயது 40) என்ற பெண் ரயில் பாதையை கடக்கும்போது பிரயாகராஜ்-தில்லி ரயில் வந்துள்ளது.
Advertisement
இந்நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்றபோது ரயில்வே தலைமைக் காவலர் கயன்சந்த் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.