முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: மத்திய அரசு

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
ஜம்மு-காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை ஜம்மு - காஷ்மீர் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் 2018 முதல் 2020 வரை 635 தீவரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 2018ஆம் ஆண்டில் 257 பேர், 2019ல் 157 பேர் மற்றும் 2020ல் 221 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 2021 பிப்ரவரி 15 வரை 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →