முகப்பு
தற்போதைய செய்திகள்

நாக்பூரில் மார்ச் 15 முதல் முழுப் பொதுமுடக்கம்

கரோனா பரவல் அதிகரிப்பால், நாக்பூரில் மார்ச் 15 முதல் 21 வரை முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் நிதின் ரெளத் தெரிவித்துள்ளார்.

Updated On : 11 மார்ச், 2021 at 3:05 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா பரவல் அதிகரிப்பால், நாக்பூரில் மார்ச் 15 முதல் 21 வரை முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் நிதின் ரெளத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு வந்த பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நாக்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Advertisement

இதையடுத்து, நாக்பூர் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளுக்கு மார்ச் 15 முதல் 21 வரை முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் நிதின் ரெளத் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.