முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரம்: அதிகரிக்கும் கரோனா பரவலின் மத்தியில் பொதுத் தேர்வு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Updated On : 18 மார்ச், 2021 at 3:43 PM
மகாராஷ்டிரம்: அதிகரிக்கும் கரோனா பரவலின் மத்தியில் பொதுத் தேர்வு
பகிர்:

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், முன்பு அறிவித்தபடி, ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு நடக்கவுள்ளது.

கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 23 முதல் மே 29 வரையிலும், 10 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 29 முதல் மே 31 வரையிலும் நடைபெறும் என தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதால் தேர்வு தேதிகள் மாற்றப்படும் என எதிர்பார்த்த சூழலில், அதே தேதிகளில் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெறும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் இரண்டு நாள்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.