முகப்பு
தற்போதைய செய்திகள்

குஜராத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

குஜராத்தில் புதிதாக கட்டிவரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
குஜராத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி
பகிர்:

குஜராத்தில் புதிதாக கட்டிவரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை திடீரென்று கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் பலியாகியுள்ளனர், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →