ஏப்.1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி 
தற்போதைய செய்திகள்

ஏப்.1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: மத்திய அரசு

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

ANI

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள அனைவரும் பதிவு செய்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. பின், மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேல் இணைநோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை நாடு முழுவதும் 4.8 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT