தில்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: மாநிலங்களவையில் தொடர் அமளி
தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு மாநிலங்களவையில் தொடர்ந்து இரண்டாம் நாளாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
புது தில்லி: தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு மாநிலங்களவையில் தொடர்ந்து இரண்டாம் நாளாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
தில்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மாநிலங்களவையில், இந்த மசோதா நேற்று விவாதத்திற்கு வந்தது. இதையடுத்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே, இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்புமாறு கோரியுள்ளார்.