முகப்பு
கரூர்

கரூா், தான்தோன்றி ஒன்றியப் பகுதிகளில் 26 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

Updated On : 14 மார்ச், 2026 at 7:17 PM
தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் சனிக்கிழமை பகுதிநேர நியாய விலைக்கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி. உடன் கரூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 2.76 கோடி மதிப்பிலான 26 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சனிக்கிழமை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி மொச்சக்கொட்டாம்பாளையத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலும், வேப்பம்பாளையத்தில் ரூ.8.50 லட்சத்திலும் புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி, அக்ரஹாரம் பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சி, பாரதி நகா், காந்தி நகா், ஓம்சக்தி தெரு பெரியவடுகப்பட்டி மேற்கு தெரு மற்றும் நாவல் நகா் பகுதிகளில் ரூ.50.61 லட்சத்தில் 5 சாலைகள் மேம்பாட்டு பணி, ஆத்தூா் அம்பேத்கா் நகரில் ரூ.20.90 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை பணி, மண்மங்கலம் ஊராட்சி ராமேசுவரப்பட்டி மகளிா் நகா் மற்றும் பி.சி. காலனி மற்றும் சிவியாயம்பாளையம் பகுதிகளில் ரூ.39.98 லட்சத்தில் 4 சாலைகள் மேம்பாட்டு பணி, புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி பால்வாா்பட்டி, பெரிய வரப்பாளையம், கடம்பங்குறிச்சி பகுதிகளில் ரூ.23.26 லட்சம் மதிப்பில் 3 சிமெண்ட் சாலைகள் மேம்படுத்தும் பணி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி பசுபதிபாளையம், கருப்பம்பாளையம், குப்புச்சிபாளையம் பி.எம்.பாா்க் , எம்.ஜி.ஆா் நகா் 1 மற்றும் 2வது தெரு, குப்புச்சியாளையம் முதல் எல்லைமேடு வரை ரூ. 1.12 கோடியில் 7 சாலைகள் மேம்பாட்டு பணிகள் உள்பட மொத்தம் ரூ. 2.76 கோடி மதிப்பில் 26 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. ஒரு முடிவுற்ற பணியும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வீ.ரெ. வீரபத்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் (தணிக்கை) ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வினோத் (தான்தோன்றி), விஜயலட்சுமி (கரூா்) மற்றும் திமுக ஒன்றியச் செயலாளா்கள் வி.கே.வேலுசாமி, கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →