முகப்பு
கரூர்

கரூரில் தவெக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

கரூரில் விசில் சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி தவெக வேட்பாளா் மதியழகன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:58 AM
கரூா் தொகுதிக்குள்பட்ட பெரியகுளத்துப்பாளையத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் மதியழகன்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 11:35 PM

கரூரில் விசில் சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி தவெக வேட்பாளா் மதியழகன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட லீலா காா்டன், வடக்கு பிள்ளையாா் கோயில் தெரு, காயத்ரி நகா், நேதாஜி நகா், சின்னகுளத்துப்பாளையம் 7-ஆவது தெரு, கருப்பண கவுண்டா் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, பெரிய குளத்துப்பாளையம், ஜாமியா நகா், அம்மன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மதியழகன் வாக்காளா்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தாா். அப்போது கட்சியின் தலைவா் விஜய் அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தவெகவினா் திரளாக பங்கேற்றனா்.

Advertisement