தில்லி ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம் 
தற்போதைய செய்திகள்

தில்லி ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ANI

புது தில்லி: தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தில்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்ப பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

சிவகார்த்திகேயனுக்கு முன்பே என்னிடம் துப்பாக்கியை வழங்கி விட்டார் விஜய் - நடிகர் உதயா பெருமிதம்

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி!

உதகைக்கு வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு!

SCROLL FOR NEXT