தற்போதைய செய்திகள்

இந்தியா வந்தடைந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ANI

ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வந்தடைந்தது.

நாட்டில் இந்திய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து முதல் வெளிநாட்டு தடுப்பூசியாக ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-விக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று மாலை வந்தடைந்தது.

இந்த தடுப்பூசிகள் தெலங்கானா மாநிலத்திற்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT