முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார் மம்தா

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானா்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார் மம்தா
பகிர்:

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானா்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இதன்மூலம் தொடா்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி மேற்கு வங்க முதல்வா் பதவியை ஏற்றுள்ளாா்.

இவருக்கு மாநில ஆளுநா் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற்றது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எனினும் தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் முதல்வர் வேட்பாளரான மம்தா பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.

சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியடைந்தாலும்,  முதல்வராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மம்தா ஆட்சியமைத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →