முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து

தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தற்போதைய செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து

தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

தமிழகத்தின் முதல்வராக புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பல நூற்றாண்டுகளாக கேரள - தமிழக மக்கள் பகிர்ந்து கொண்ட சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும், சிறந்த இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்றும் நம்புகிறேன்.

முன்னதாக, 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

பின்னர் ஆளுநர் மாளிகையில் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. 

பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்குப் பிறகு இன்று பிற்பகல் தலைமைச் செயலகம் வந்த அவர் அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.4,000, ஆவின் பால் விலைக் குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →