தற்போதைய செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

DIN

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை தமிழகத்தில் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இன்றும், நாளையும் 24 மணிநேரமும் பேருந்துகளை இயக்கி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே சென்னையில் இருந்து கிளம்பும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மும்மடங்கு வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT