தமிழகத்தில் 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
தமிழகத்தில் அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே 24 வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 24 மணிநேரமும் பேருந்துகளை இயக்கிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்ற போக்குவரத்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின் அதிகம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட செய்தியில்,
ஊரடங்கின் போது கட்டணம் அதிகமாக வசூலித்த 304 ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 25 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மொத்தம் ரூ. 38.12 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.