முகப்பு
தற்போதைய செய்திகள்

டவ்-தே புயல்: திருவனந்தபுரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

அரபிக்கடலில் நாளை சனிக்கிழமை டவ்-தே புயல் உருவாக உள்ளதால், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
கோப்புப்படம்
பகிர்:


அரபிக்கடலில் நாளை சனிக்கிழமை டவ்-தே புயல் உருவாக உள்ளதால், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற உள்ளதாகவும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16 -ஆம் தேதி மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது. இந்த புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கரையைக் கடக்கலாம்.

புயலால் லட்சத்தீவுகள் கடலோர மாநிலங்களான கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்ரம், தென் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை இருக்கும். 

இந்நிலையில், நாளை புதிய புயல் டவ்-தே உருவாவதால் திருவனந்தபுரம் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதையடுத்து திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →