முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு: மத்திய அரசு

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா இரண்டாம் அலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதார இணை செயலாளர் பேசியது,

கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிக்கின்றது.

தற்போது 11 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கர்நாடகத்தில் 5,98,625 பேர், மகாராஷ்டிரத்தில் 5,21,683 பேர், கேரளத்தில் 4,42,550 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

8 மாநிலங்களில் 50,000க்கும் அதிகமானோரும், 17 மாநிலங்களில் 50,000க்கு குறைவாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரம், குஜராத், உ.பி., சட்டீஸ்கர் மாநிலங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

நாட்டில் கடந்த வாரம் 21.9% ஆக இருந்த நேர்மறை விகிதம் இப்போது 19.8% ஆக குறைந்துள்ளது. தில்லி, சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நேர்மறை விகிதம் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.