தற்போதைய செய்திகள்

அரபிக்கடலில் உருவானது ‘டவ்-தே’ புயல்: 8 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது.

DIN


தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. 

இந்த புயலுக்கு மியான்மா் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயா் வைக்கப்படவுள்ளது. இந்த புயல் 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, கேரளம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்ரம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டவ்-தே புயல் காரணமாக கேரளாவின், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோசு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய  8 கடற்கரையோர மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புயல் காரணமாக மீனவர்கள் மே 17 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தருமபுரியில் 2-ஆவது நாளாக மழை

100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மின்சார ஸ்கூட்டா் நன்கொடை

புதுவை சாலைப் போக்குவரத்து ஊழியா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT