முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பையில் அதீத கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மும்பையில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:

டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மும்பையில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் (டவ்-தே) இன்று 17.5.2021 காலை 5.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தற்போது டையூவிலிருந்து 160 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல்  பகுதியிலிருந்து 140 திசையில் நகர்ந்து இன்று மாலை/இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது.

இதனால் மும்பையில் அடுத்த சில மணிநேரத்திற்கு அதீத கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 120 கி.மீ.க்கு காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →