தற்போதைய செய்திகள்

கரோனா நிதியாக ரூ. 1 கோடி வழங்கியது அதிமுக

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 1 கோடி இன்று வழங்கப்பட்டது. 

DIN

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 1 கோடி இன்று வழங்கப்பட்டது. 

கரோனா நிவாரண நிதியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பிற்பகல் வழங்கினார்.

இதுகுறித்து நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்,

கரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT