தில்லியில் மேலும் 4,482 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 4,482 பேருக்கு இன்று(சனிக்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 4,482 பேருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 4,482 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 14,02,873ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 265 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 22,111 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 9,403 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 13,29,899 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
நோய் பாதித்த 50,863 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.
இதனிடையே நோய்த் தொற்று உறுதியாகும் விகிதம் 6.89 சதவீதமாக குறைந்துள்ளது.