முகப்பு
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்ரமணியன்

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் கூறியது,

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 20ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அந்த நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று கரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.