பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல்: முதல்வர் உத்தரவு
ராஜீவ் காந்தி வழக்கில் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி வழக்கில் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயூள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய விதிகளைத் தளர்த்தி 30 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்.