புதுவையில் மேலும் 1,445 பேருக்கு கரோனா
புதுச்சேரியில் புதிதாக 1,445 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 1,445 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, புதுவையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 94,612 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 30 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,325ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,011 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 75,947 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 17,340 பேர் சிகிச்சையில் உள்ளனர்.