முகப்பு
தற்போதைய செய்திகள்

வேலூரில் கருப்பு பூஞ்சையால் 40 பேர் பாதிப்பு: சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை

கருப்பு பூஞ்சை நோய்க்கு வேலூர் மாவட்டத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:

கருப்பு பூஞ்சை நோய்க்கு வேலூர் மாவட்டத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயானது பாக்டீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அவை மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன.

கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னர் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் பார்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்புகூட நேரிடலாம்.

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவர்கள், கரோனா தீவிரமாக பாதித்து ஸ்டீராய்டு செலுத்திக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்பவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற் கொண்டவர்கள், புற்றுநோய், ஹெச்ஐவி நோயாளிகள் ஆகியோர் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தற்போது 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது, கருப்பு பூஞ்சை நோய் என்பது புதிதல்ல. பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அம்மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 10 பேர் மட்டுமே வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அருகே உள்ள மாவட்டங்களையும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, கருப்பு புஞ்சை பாதித்தவர்களில் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும் உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், மாவட்டத்திலுள்ள வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் கருப்பு புஞ்சை பாதிப்பால் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →