அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவு
அமெரிக்காவின் அலாஸ்காவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்காவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது அலாஸ்காவின் வடக்கு சிக்கலூன் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 12.29 மணிக்கு(இந்திய நேரப்படி) ஏற்பட்டுள்ளது. இது கடற்பரப்பின் கீழ் 74 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.