தமிழகத்தில் மேலும் 574 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 574 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:51 AM
தமிழகத்தில் புதிதாக 574 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,33,585 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 155 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,307 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,16,205 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 5,073 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.