முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 

இவை  மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு 36 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அமைதியான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சில வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணி முதலே ஆர்வமாக வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி  வசதி செய்யப்பட்டுள்ளது. 

குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குசாவடி வரும்  வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமிநாசினி வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு கையுறை வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சீர்காழி டிஎஸ்பி லாமெக்  தலைமையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  காவல்த்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . இதேபோல் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →