மாணவர் அனிஷ் கான் மரணம்: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையீடு
மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக 130 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மாணவர் அனிஷ் கான், ஹவுராவில் படுகொலை செய்யப்பட்டார்.
கொல்கத்தா: மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக 130 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மாணவர் அனிஷ் கான், ஹவுராவில் படுகொலை செய்யப்பட்டார்.
மாணவர் தலைவர் அனிஷ் கானின் சந்தேக மரணம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்தார்.
கானின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிய நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வெள்ளிக்கிழமை இரவு நான்கு பேர் போலீஸ் சீருடைகளை அணிந்துகொண்டு தங்கள் வீட்டிற்கு வந்ததாகக் கானின் தந்தை குற்றம் சாட்டினார். அம்தாவில் உள்ள தங்கள் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தனது மகன் தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இந்த மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கானின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.