தற்போதைய செய்திகள்

தில்லியில் இரவு ஊரடங்கு நீக்கம்: ஏப்ரல் 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்

PTI

புது தில்லி: தில்லியில் இரவு ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

கரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும், ஏப்ரல் 1 முதல் பள்ளிகளில் நேரடி  வகுப்புகளை மீண்டும் தொடங்கவும், முகக்கவசம் அணியாதவர்களின் அபராதத்தை ரூ.2,000-லிருந்து ரூ.500-ஆக குறைக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

கரோனா நிலைமை சற்று மேம்பட்டு வருவதால் கட்டுப்பாடுகள்  முழுவதுமாக நீக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். 

வேலையிழப்பு காரணமாக மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.  எனவே, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT