முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் விபத்து: 5 பேர் பலி

குருகிராம்: தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
கோப்புப்படம்
பகிர்:

குருகிராம்: தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

அதிகாலை 2 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் சடலங்களை மீட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து உதவி காவல் ஆய்வாளர் கஜேந்தர் சிங் கூறியது: “இறந்தவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். காரின் நம்பர் பிளேட்டில் ராஜஸ்தான் பதிவெண் உள்ளது” என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →