முகப்பு
தற்போதைய செய்திகள்

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்: திமுக, பாமக வெளிநடப்பு

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக (2) உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சி(5) உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக (2) உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சி(5) உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

இரண்டாவது முறையாக ஒன்றியக் குழுக் கூட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.

பாமக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருக்கு எதிராக பாமக உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு  கூட்டம், ஒன்றியக் குழுத் தலைவர் பானுமதி பாலசுப்பிரமணியம்(பாமக) தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவர் உட்பட 11 உறுப்பினர்கள் உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் 6 பேர், அதிமுக உறுப்பினர்கள் 3 பேர், திமுக உறுப்பினர்கள் 2 பேர் உள்ளனர். ஒன்றியக் குழுத் தலைவர் பாமகவை சேர்ந்தவர்.  ஒன்றியக் குழுத் துணை தலைவர் அதிமுகவை சேர்ந்தவர்.

இன்று நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் 32 தீர்மானங்கள் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கணேசன் பேசும்பொழுது, மன்றத்தின் நிதி நிலவரம் செலவு கணக்குகள் குறித்து விவரம் கேட்டோம். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் ஜீப் ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வாங்கிய செலவுத்தொகை அதிகமாக காட்டப்படுகிறது.

இதனால்தான் கடந்த கூட்டத்தை புறக்கணித்து இன்று இரண்டாவது முறையாக இந்த கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று 5 பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்களும், 2 திமுக உறுப்பினர்களும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். போதிய நேரம் இல்லாத காரணத்தால் தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.