தற்போதைய செய்திகள்

அவிநாசி அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

DIN

அவிநாசி: அவிநாசி காந்திபுரம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் வியாழக்கிழமை குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 
அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி மார்ச் 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாசிவராத்திரி, கொடியேற்றம் நடைபெற்றது.

சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காள பரமேஸ்வரி அம்மன்.
சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காள பரமேஸ்வரி அம்மன்.

மார்ச் 2-ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை அலகு தரிசனம், இரவு குண்டத்துக்கு பூப்போடுதல்,  அம்மனுக்கு வெண்ணை சாத்துபடி செய்தல் ஆகியவை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

வெள்ளிக்கிழமை வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தேர் நிகழ்ச்சியும், சனிக்கிழமை கொடியிறக்கம், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை பேச்சியம்மன் அபிஷேக பூஜைகளும், திங்கள்கிழமை மகா அபிஷேக உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT