அரூர் பேரூராட்சியின் தலைவர் இந்திராணி, துணைத் தலைவர் சூர்யா து. தனபால் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கலைராணி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள். 
தற்போதைய செய்திகள்

அரூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்: திமுக தம்பதியர் வெற்றி

அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த தம்பதியர் வெற்றி பெற்றுள்ளனர்.

DIN

அரூர்: அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த தம்பதியர் வெற்றி பெற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின் தலைவர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுக 7, அதிமுக 7, பாமக 2, சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையெடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் இந்திராணி 12 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் த.நிவேதா 6 வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். இதேபோல், அரூர் பேரூராட்சியின் துணைத் தலைவராக திமுக வேட்பாளர் சூர்யா து.தனபால் வெற்றி பெற்றார். அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவியில் வெற்றிப் பெற்றுள்ள சூர்யா து.தனபால், இந்திராணி ஆகியோர் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அரூர் பேரூராட்சியின் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் ஆகியோரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதில், முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலர் எஸ்.ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் முல்லைரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT