பெரியகுளம் நகர்மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் தேர்வு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக திமுகவிற்கும், துணைத்தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்து, திமுக தலைமை அறிவித்தது.
தற்போதைய செய்திகள்பெரியகுளம் நகர்மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் தேர்வு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக திமுகவிற்கும், துணைத்தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்து, திமுக தலைமை அறிவித்தது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக திமுகவிற்கும், துணைத்தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்து, திமுக தலைமை அறிவித்தது.
அதன்படி இன்று நடைபெற்ற பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக சுனிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் கட்சி தலைமை அறிவிப்பையும் மீறி 26வது வார்டு திமுக உறுப்பினர் ராஜாமுகமது துணைத்தலைவராக வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ராஜாமுகமது துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டது.
கட்சி தலைமை அறிவிப்பையும் மீறி திமுக கட்சியினர் போட்டியிட்டு, தேர்வானதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியகுளம் எம்எல்ஏ மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் K.S.சரவணக்குமார் அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
.