மானாமதுரை நகர்மன்றத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சே. பாலசுந்தரம். 
தற்போதைய செய்திகள்

மானாமதுரை நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியைச் சேர்ந்த

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியைச் சேர்ந்த சே.பாலசுந்தரம் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மானாமதுரை நகர்மன்றத் தலைவர் தேர்தலில் திமுக தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாரியப்பன் கென்னடி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

அதைத் தொடர்ந்து பிற்பகல் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் 8 ஆவது வார்டில் வென்ற உறுப்பினர் சே.பாலசுந்தரம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து 15 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமியை தோற்கடித்த க.தெய்வேந்திரன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் பாலசுந்தரம் கூடுதல் வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என நகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார். துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாலசுந்தரத்திற்கு திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

செல்லாத வாக்கு பதிவு

மானாமதுரை நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம்  27 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் பாலந்தரத்திற்கு 21 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் தெய்வேந்திரனுக்கு 5 வாக்குகளும் கிடைத்திருந்தது. ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஆணையர் கண்ணன் தெரிவித்தார். 

தலைவர் சிலைகளுக்கு மாலை 

மானாமதுரை நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் தேர்தலில் வென்ற பாலசுந்தரம் இருவரும் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று மானாமதுரையில் உள்ள அண்ணா சிலை, தேவர் சிலை, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT