துறையூர் நகர்மன்ற தேர்தலில் திமுக வெற்றி
திருச்சி மாவட்டம் துறையூர் நகர்மன்றத் தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 18-வது வார்டு உறுப்பினர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தற்போதைய செய்திகள்துறையூர் நகர்மன்ற தேர்தலில் திமுக வெற்றி
திருச்சி மாவட்டம் துறையூர் நகர்மன்றத் தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 18-வது வார்டு உறுப்பினர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் நகர்மன்றத் தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 18-வது வார்டு உறுப்பினர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
துறையூர் நகராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடர் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் 18வது வார்டில் வெற்றி பெற்ற இ.செல்வராணியும், அதிமுக சார்பில் 23வது வார்டில் வெற்றி பெற்ற இ.சரோஜாவும் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் 17 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 7 வாக்குகளும் பெற்றனர்.
மொத்தம் உள்ள 24 வார்டுகளில் 15 வார்டுகளில் திமுகவும், 7 வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றிருந்தது. திமுகவைச் சேர்ந்த இருவர் சுயேச்சையாக போட்டியிட்டு வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். தலைவர் தேர்தலில் சுயேச்சைகளின் வாக்குகளையும் சேர்த்து 17 வாக்குகள் பெற்ற திமுகவைச் சேர்ந்த இ.செல்வராணி துறையூர் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.மனோகரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றியக்குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், துறையூர் நகரச் செயலரும் 10வது வார்டு உறுப்பினருமான ந.முரளி, ஒன்றிய செயலர் இள.அண்ணாதுரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், துறையூர் நகராட்சி மேலாளர், ஆணையர் பொறுப்பு எம். முருகராஜ் உள்ளிட்ட பணியாளர்கள் பாராட்டினர்.